×

ஐசிசி டெஸ்ட் தரவரிசை ஆஸ்திரேலியா நம்பர் 1

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்திய அணியை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது. மே 2021க்கு பிறகு விளையாடிய போட்டிகளின் முடிவுகளை வைத்து வருடாந்திர கணக்கீட்டு அடிப்படையில் நேற்று வெளியான பட்டியலில் ஆஸி. அணி 3715 புள்ளிகளுடன் (30 போட்டி, ரேட்டிங் 124) நம்பர் 1 அந்தஸ்தை வசப்படுத்தியது. இந்தியா 3018 புள்ளிகளுடன் (26 போட்டி, ரேட்டிங் 120) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் முறையே 3-5வது இடத்தில் உள்ளன. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் இந்தியா முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

The post ஐசிசி டெஸ்ட் தரவரிசை ஆஸ்திரேலியா நம்பர் 1 appeared first on Dinakaran.

Tags : ICC ,Australia ,Dubai ,India ,International Cricket Council ,Dinakaran ,
× RELATED டி20 உலக கோப்பைக்கு தீவிரவாத...